தமிழ் சினிமாவில் ஒரு பழைய பாடல் ஒலிக்கும் எங்களுக்கும் காலம் வரும்.. காலம் வந்தால்... என... அது போல சமீபத்தில் நடந்தது.. 13 அக்டோபர் முதல் கொழும்பில் இருந்து யாழ்ப்பானத்திற்கு இரயில் சேவை துவங்கியது. எவ்வளவு சந்தோசமான செய்தி. 1990 யுத்தத்தில் தண்டவாளங்கள் கடும் சேதம் அடைந்தது. இதையடுத்து அந்த நாட்டு அரசாங்கம் இரயில் சேவையை நிறுத்தியது. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இரயில் சேவை துவங்கப்பட்டது.

வடுவூர் பறவைகள்... மன்னார்குடிக்கு அருகாமையில் இந்த பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கே வெளி நாடுகளில் இருந்து பறவைகள் பருவ காலங்களில் வந்து செல்கிறது. இங்கே அக்டோபர் முதல் பிப்ரவரி சென்று பார்க்கலாம். இது மன்னார்குடியில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. சிறிய ஒரு பிக்னிக் ஸ்பாட்.

நெல்லை மாவட்டத்தின் கடைகோடியில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அழகான இயற்கை எழில் சூழலில் அமைந்தது தான் மணிமுத்தாறு அருவி. இந்த அருவியின் அழகையும் அது அமைந்த இடத்தையும் நேரில் பார்த்தால் வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். இந்த அருவிக்கு செல்ல வழி நெல்லையில் இருந்து கல்லிடைகுறிச்சி சென்று அங்கிருந்து மணிமுத்தாறு அருவி செல்ல வேன்டும். முதலில் நமது கண்ணில் தென்படுவது மணிமுத்தாறு அணை தான். அந்த அணையில் இருந்து இடது புறம் செல்லும் சாலையில் சென்று மலை மேல் சில மைல்கள் சென்றால் பாலத்தின் இடது புறம் அழகான நீர்வீழ்ச்சி .