இறைவனின் இலை உதிர் காலம்!

 நம்மால் அலி அத்தா என்று அழைக்கப்பட்ட  ஜானாப் A.N.M. அலி ஜின்னா அவர்கள் இறைவனடி சேர்ந்தார்கள். எத்தனையோ இறை இல்லம் அமைய அயராது உழைத்தவர்கள் நம்மை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தி நம்மை விட்டு பிரிந்தார்கள். அல்லா அவர்களை நல்லாடியார் கூட்டத்தில் சேர்க்க துஆ செய்கின்றோம்.

தேர்தல் முடிந்து முடிவுகள் வந்துவிட்டது.  ஆட்சி அமைக்க அதிகாரம் கொடுத்தார்கள் என்ற சந்தோசம் ஓர் பக்கம், வலுவான எதிர்கட்சியாக வலுபெற்றோம் என்ற ஆறுதல் ஒர் பக்கம்,  மாற்றத்தை விரும்பாத மக்கள் என்ற ஏமாற்றம் ஒர் பக்கம்.

கலைஞர் விலகி ஸ்டாலினை முன் நிறுத்தி இளைஞர்களை கொண்டு ஒர் ஆம் ஆத்மியை நிறுவ தவறிவிட்டார்கள் என்பது சில அரசியல் கருத்து.

அன்புமணி ராமதாஸ் ஒர் சிறந்த மீனவர். ஆனால் குட்டைகள் இருந்துகொண்டு கடல் மீன் பிடிக்க ஆசைபட்டார் என்பது என் கருத்து.

முடிவில் தனி பெருபான்மை, வலுவான எதிர்கட்சி ஒர் நல்லாட்சிக்கு தேவை.

கொஞ்சம் பொருளாதரதையும் பார்போம். சுப்பிரமணிசாமி இந்தியாவின் ரிசர்வ் பேங்கின் கவர்னர் ரகுராம் ராஜனை மாற்றவேண்டும் என்று கூறுகின்றார். அவர் கூரும் காரணங்களில் ஒன்று இந்தியாவின் கார்பரேட்களின் கடன் கூடிவிட்டதாம்.  பேங்குகள் தன் வாராத கடன்களை வெளியிடவேண்டும்  என்று சொல்லியதால் எல்லா கடன் களும் வெளியில் வந்தது. கட்டாய வசூல் வேண்டும் என்றதால அம்பானி சார்ந்த கம்பனிகள் சொத்துகளை விற்கின்றன.  மல்லையா தொல்லைவிட்டது என்று ஒடிவிட்டார். சுப்பிரமணி சுவாமி ரிசர்வ் பேங்க் கவர்னர் பதவிக்கு கண் வைத்தால் மோடி அதற்காக மோசடி செய்யவும் வாய்ப்புள்ளது.

 

கடைசியில் எஜிப் ஏர்லைன்ஸ் AIRBUS A320 விபத்துக்கு ஆளாகியுள்ளது.  இதே குடும்பத்தை சேர்ந்த விமானங்கள்  ஏழு மில்லியன் பயணத்தில் ஒர் முறை விபத்துகுள்ளாகியுள்ளது. ஆனால் AIRBUS A320 கடந்த 18 மாதங்களில் 6 விமானங்கள் விபத்துள்ளாகியுள்ளது. கடைசியில் கருப்பு பெட்டி கிடைக்கவில்லை என்பார்கள். விபத்துக்கு உண்மையான காரணம் வெளிவருமா?

 

இன்னும் வாரம்