சென்ற வாரம்…

சென்ற வாரம் மதுக்கூரில் நிகழ்ந்த நிகழிச்சிகளில் அரசியல் முக்கியம் அடைந்துள்ளது. சில இறப்புகளும், விபத்துகளும் மனதை வருடியது. நம்மில் ஒருவரை துபையில் விபத்தில் இழந்தது நமக்கு மன வேதனையை கொடுத்தது. மன வலியுடன் பணிபுரியும் நாம், நம்மை நம்பு ஒரு குடும்பம் உள்ளது என்பதை மனதில் நிறுத்தி பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். என்றும் நடக்காதது இன்னும் நடக்காது என்பது பொய்.

மதுக்கூர் ஜாமியா பரிபாலனக்கமிட்டி மற்றும் மதுக்கூர் ஜும்மா பள்ளிவாசல் கட்டிட கமிட்டி அங்கிகாரத்துடன் துபை கோட்டை பள்ளிவாசலில் சென்ற மாதம் 28ம் தேதி  வியாழன் மதுக்கூர் இஸ்லாமிய சமுதாய நல அமைப்பு முலமாக கலந்தாய்வு நடைப்பெற்றது. மக்கள் ஒற்றுமையுடன் புதிய பள்ளிவாசல் கட்ட எல்லா ஒத்தழைப்பும் தருவாதக கூறியது அந்த அமைப்புக்கு உற்சாகம் கொடுத்தது தொடர்ந்து அந்த நோக்கில் பயணம் செய்ய உள்ளார்கள்.

நமது மாநில தேர்தலை நோக்கும் பொழுது கட்சிகள் சிதறி ஒட்டை பிரிப்பது தெளிவாக உள்ளது. மத சார்பற்ற நமது நாட்டை உடைக்கும் BJP போன்ற கட்சி 31% ஒட்டுகளை மட்டும் பெற்று 69% மக்களின் எதிர்ப்பை பெற்றும் ஆட்சி அமைத்தார்கள் என்றால் அதற்கு காரணம் இந்த ஒட்டு சிதறல்தான்.

இதைவிட கொடுமை முஸ்லிம் போன்ற சிறுபான்மையினர் அரசியலில் காழ்புணர்ச்சியுடன் சிதறி முழு சமுதாயத்துக்கும் துரோகம் செய்கிறார்கள் என்றால் இதற்கு வேறு யாரையும் குறை சொல்லமுடியாது.

 -இன்னும் வாரம்