இறைவா போதும் நிறுத்திக்கொள்..

சுனாமி என்ற பேரழிவை எங்களுக்கு காட்டினாய், எராளமான உயிர்களை அள்ளிக்கொண்டாய்.

நாங்கள் தொடங்கிய  விமான பயணத்தை எங்கு முடித்தாய்? தேடு, தேடு  அவர்களை என்று இன்னும் எங்களை தேடவிட்டாய்.

 நல்ல தண்ணீர் தேடி உப்பு நீரில் மிதந்தவர்களை கொன்று எங்களை கண்ணீரில் மிதக்கவிட்டாய்.

 நாங்கள் வாழ்தாரம் தேடி வந்த வளைகுடா நாடுகளை சுற்றி குண்டுகளை பொழியவைத்தாய், குழந்தைகளையும் கொன்றுவிட்டாய்.

இன்று பூகம்பம் என்றாய் எங்களை பூமிக்குள் புதைத்தாய்.

இறைவா போதும் நிறுத்திக்கொள், இல்லையினில் மீதி உள்ள எங்களையும் எடுத்துக்கொள். நாங்கள் மறு நரகத்துக்கும் தாயாரகிவிட்டோம்.