மதுக்கூரின் முக்கிய நீர் ஆதாரமாக இருந்த குளம்

இதன் பெயர் புதுக்குளம்.

இக்குளத்தின் பரப்பளவு சுமார் 4 ஏக்கர் 69 சென்ட்.

இக்குளம் மதுக்கூர் ஜெமின் காலத்து பழமை மிக்க குளம்.

இந்த குழத்தில் சுக்கான் கல் கலந்த கழி மண் நிறம்பி இருப்பதால் மருத்துவ குணம் கொண்ட பௌதிக தன்மையை உடைய குளம்.

அதில் குளித்தால் காய்ச்சல், தலைவலி,வரட்டு இருமல், அறிப்பு, சொறிசிரங்க,நீர் குத்து போன்ற உடல் உபாதைகள் சரியாகும்.

இந்த குளத்தின் கரையோரங்களில் அதாவது குளத்தின் வட பகுதியில் கூட்டுறவு பண்டக சாலையும், பொது கழிப்பிடமும், மேல் புறம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியும், அங்கன்வாடி மையம், மனவளர்ச்சி சிதைந்த குழைந்தகளுக்கான சிறப்பு பள்ளி மற்றும் சத்துனவு கூடமும் இங்கு செயல்படுகிறது.

தனிநபர் ஆக்கிரமிப்பு இன்றி 
கேட்பாரற்று கிடந்த இக்குளத்தை தூர்வாரி,சுத்தம் செய்து மீண்டும் புதுக்குளமாக்கி இருக்கிறார்கள், மதுக்கூரை சேர்ந்த முகம்மது மொகைதீன் தலமையில் தன்னார்வ இளைஞ்கர்கள்.