மதுக்கூரில் புதிய் பள்ளிவாசல் கட்டுவதற்கு ஜாமத்தினர்கள் முடிவு செய்து அதற்கான ஆரம்பபணிகள் தொடங்கப்பட்ட செய்தியை முன்னர் மதுக்கூர்.காமில் பதிவு செய்து இருந்தோம். அதனை தொடர்ந்து மதுக்கூர் ஜாமியா பரிபாலனக்கமிட்டி தலைவர் ஜனாப் முகைதீன் மரைக்கயார் அவர்களிடன் நடைபெற்ற நேர்காணலின் விவரங்களை தங்களுக்கு பதிவு செய்கின்றோம்.

மதுக்கூரில் புதிய பள்ளிவாசல் கட்டுவதற்கு முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெறுகின்றது என்பதை அறிய வந்தோம். அதன் விவரம் பற்றி கூறுங்கள்.

தங்கள் குறிப்பிட்டபடி எல்லாம் வல்ல அல்லாவின் கருணையால் மதுக்கூரில் புதிய பள்ளிவாசல் தற்பொழுது அமைந்து உள்ள இடத்தில் கட்டுவதற்கு ஜாமாத்தினர்கள் முடிவு செய்யப்பட்டது. பலரின் யோசனை மற்றும் கருத்தின்படி இப்பொழுது உள்ள பேஷ் இமாம் தொழுகை நடத்துகின்ற பகுதியை அப்படியே விட்டுவிட்டு அதன் கிழ்புறம் மற்றும் முன்புறம் அடங்கியபடி முன்னே வடிவு அமைக்கப்பட்டபடி புதிய பள்ளிவாசல் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் விவரங்களை தெரிவிக்கவும் தாமாக முன்வந்து அளிக்கும் நன்கொடை பெறவும் நமதூர் மக்களை அணுகிவருகின்றோம்.

மேலும் நமதூர் மக்களின் குறிப்பிட்ட வள்ளாலர்களையும் அணுகி நன்கொடை கேட்டு வருகின்றோம். பெரும் தொகையை நன்கொடை அளிக்க விருப்பமுள்ளவர்களுக்கு தவணை முறையில் பெற்றுக்கொள்ளவும் ஜமாத்தினர்கள் முடிவு செய்துள்ளார்கள்.

இப்பள்ளிவாசல் நல்லமுறையில் விரைவில் கட்டி முடிப்பட்டு இன்ஷால்லாஹ் நமக்கும் நமது சந்ததினர்களுக்கும் இறைவிடமாக அமைய தங்களின் பேராதரவையும், ஒத்தழைப்பையும் கோருகின்றோம். வஸ்ஸலாம்.