ஆத்மார்த்த நட்புகளே நலம் நலமறிய பேராவல்.. என்ன சேதி? எப்படி இருக்கீங்க? நீண்ட நாளாச்சி.. நட்புகளுடம் உறவாடி.. இறைவன் உதவியால் கோடை மழை நமது ஊரில் நல்ல மழையாக இருந்தது. இரன்டு செ.மீ. மழை பதிவாகியுள்ளது.. மிக்க சந்தோசம். என்ன தான் இயந்திரமான வாழ்க்கை.. குடும்பம், பொருளாதாரம், எதிர்கால திட்டங்கள், எண்ணங்கள் என்றாலும், இந்த பரபரப்பான வாழ்க்கையில் இருந்து நமக்கு ஆறுதலும், மாறுதலும், தருவது.. இறைவணக்கமும், சுபகாரியங்களும், பண்டிகைகளும் என்றால் மிகையல்ல. இப்போது நம்மை கடந்து சென்றது.. மொழிவாரி புத்தாண்டுகள்..

முதலில் வந்தது தெலுங்கு வருடப்பிறப்பு உகாதி, அடுத்து வந்தது சித்திரை திரு நாள், அதற்கு அடுத்து வந்தது விஷு. என்னதான் மக்கள் பல்வேறு அலுவல்களில் இருந்தாலும் இது போல பண்டிகை காலங்கள் நமக்கு ஒரு ஆறுதல் தான். அதற்காக மனதில் ஒரு உற்சாகம், அதை வரவேற்க, நமது பாரம்பர்ய முறைப்படி செய்யும் போது அடுத்த தலைமுறைக்கான நமது குழந்தைகள் அதை பாடமாக படிக்க... இனிமையான காலங்கள்.. பெரும்பாலும் வருடப்பிறப்புகளில் அசைவம் சமைப்பதில்லை.. எல்லா மொழிகளிலும் சைவம் தான்.. நம்ம தமிழகத்தில் சில மக்கள் சித்திரை திரு நாளை வருட பிறப்பாக கொண்டாடுவதில்லை. அவர்கள் வருடப்பிறப்பு என்பது தைத்திங்கள் முதல் நாள் தான்.

 

விஷு மஞ்சள் வர்ணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இதற்காக சைவ உணவுடன் மஞ்சள் வெள்ளரி, அத்துடன் கொன்ன பூக்கள் முக்கியம் .. இந்த கோடை காலத்தில், கொன்ன பூக்கள் அழகாக பூத்து குலுங்க்குகிறது. திருவனந்தபுரம் நகரில் அதுவும் கோவாளம் செல்லும் சாலையில், கொன்ன மரங்கள் பூத்து நிற்பது அவ்வளவு அழகு. மக்களின் பரப்பான வாழ்க்கை இடையில் இது போன்ற பண்டிகைகள் வந்து செல்வது நமது வாழ்க்கையில் அது ஒரு அழகு தான். வாழ்த்துக்களுடனும்.. பிரார்த்தனைகளுடனும்...

By Anwar Madukkur