மதுக்கூரில் ஒரு நாள்

மதுக்கூரில் ஒரு நாள்: மாலிக்கடை முக்கூட்டுசாலையில் இருந்து விடு திரும்பிக்கொண்டு இருந்தபொழுது, மதுக்கூர் போலிஸ் ஸ்டேஷன் முன் ஒரு கான்ஸ்டேபிள் லத்தியால் தரையில் அடித்துக்கொண்டு வருகின்ற ட்வீலரையேல்லாம் ஸ்டேஷனுக்குள் அனுப்பிக்கொண்டு இருந்தார். டிரைவர் லைஸென்ஸை செக் செய்கிறார்களாம்.

ஊரில் ஒடும் பெரும்பாலான டுவிலர்கள் தூங்க போய்க்கொண்டு இருக்கின்ற ப்யுல் முள்ளை அப்ப அப்ப 100 ருபாய்க்கு பெட்ரோல் போட்டு எழுப்பிக்கொண்டு இருக்கவே நேரம் சரியாக இருக்கும்பொழுது யார் லைஸேன்ஸைபற்றியெல்லாம் சிந்திப்பது.

சிக்கிக்கொண்டவர்களுக்கு கெட்டகாலம், தப்பித்துக்கொண்டவர்களுக்கு நல்லகாலம். அன்றுதான் அதிகமான டுவீலர்கள் யூடேர்ன் அடித்ததை பார்க்க முடிந்தது