ஆத்மார்த்த நட்புகளே நலம் நலமறிய பேராவல் என்ன சேதி? எப்படி இருக்கீங்க? உங்கள் அனைவருக்கும் இனிய பெருநாள் நல் வாழ்த்துக்கள் கடந்த ஒரு மாத காலமாக நாம் பெற்ற மனத்தூய்மை, இறையச்சம், இறைவணக்கம், நல் வழி போதனைகள் அனைத்தும் இனி வரும் காலங்களிலும் கடை பிடிப்போம். ஊரின் நண்மைக்காவும், ஒற்றுமையான சமுதாயத்திற்காகவும், ஆரோக்யமான நல் வாழ்விற்காகவும் நாம் அனைவரும் பிரார்த்தனைகள் செய்வோம்.

பிரார்த்தனைகள் என்பது எவ்வளவு வலிமையானது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. என்னடா, வேதாந்தம் பேசுகிறான் என நினைக்க வேண்டாம். நாம் கடவுளிடம் கேட்டு அதை கடவுள் நமக்கு கொடுக்கும் போது தான் நம்மை அறியாமல் ஒரு பரவசம் ஒரு சந்தோசம்... ஒரு பூரிப்பு.. அது தான் பிரார்த்தனை.. அனு தினமும் இறைவழிபாடும்.. பிரார்த்தனையும் வேண்டும். யார் செய்த பிரார்த்தனை எனத் தெரியாது.. சென்ற மாதம் நாம் நினைத்தோமா? நமது ஊர் ஆற்றில் தண்ணீர் வரும் என.. இறைவனின் அருட்கொடைகளில் ஒன்றான தண்ணீர் வானத்திலிருந்து மழையாய் பொழிந்து கர்நாடக நதிகளில் வெள்ளமாய் உருவாகி 90 ஆயிரம் கன அடிக்கு தண்ணீர் வந்து அனையின் நீர் மட்டம் 120 அடியை எட்டும் என்றதும், தஞ்சை மக்களின் மனதில் ஒரு சந்தோசம்..

மன கண்ணில் அந்த பசுமையான வயல் வெளிகள்... ஒரு மாதத்திற்குள் அப்படி ஒரு காட்சி. எல்லா புகழும் இறைவனுக்கே! இன்று முதல்வர் அறிவித்துள்ளார்.. எதிர்வரும் ஆகஸ்ட் 15ம் தேதி மேட்டூர் அனை திறக்கப்படும் என. மிகவும் சந்தோசமான செய்தி.. காரனம் இப்போது தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. பல இடங்களில் ஆழ்துளைகளில் தண்ணீர் இல்லை. ஆற்றில் தண்ணீர் வந்து நமது ஊர்களில் நீர் மட்டம் உயரனும். அது மட்டுமல்லாது குளம், குட்டைகள், ஏரி என.. அனைத்து நீர் நிலைகளிலும் நீர் தேக்கி வைக்க.. நல்ல ஒரு வாய்ப்பாக இருக்கும்.