சென்ற 26ம் தேதி, புதன் கிழமை மதுக்கூரில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக சகோதரர் ஜாகிர்(நைஃப்) மற்றும் யாகூப் (பர்மா) ஆகியோரது குடும்பத்தினர் காரில் பாண்டிச்சேரி சென்று கொண்டு இருந்தார்கள்.காலை 6.30 மணியளவில் சிதம்பரத்துக்கு அருகில் சென்று கொண்டு இருந்த பொழது அவர்கள் பயணம் செய்த கார் விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த இடத்திலே ஜாகிர் அவர்களின் மனைவி காலமானார்கள். மற்றவர்கள் படுகாயம் அடைந்தார்கள்.

ஆத்மார்த்த நட்புகளே நலம் நலமறிய பேராவல் என்ன சேது? எப்படி இருக்கீங்க? சில தினங்களுக்கு முன் நமது பதிவை பார்த்து, பல சகோதரர்கள் மீன்டும் நமது இனையத்தில் தாம் உறுப்பினர் ஆக பதிவு செய்து கொண்டு இருக்கிறார்கள். இது தெரியாத சகோதரர்களுக்கும் தாங்கள் தகவல் கொடுத்து அவர்களையும் உறுப்பினர் ஆகவும், நமது சமுதாய செய்திகள் பரிமாற்றத்துக்கும் உதவியாக இருக்கும் என்பதையும் இங்கே நினைவு படுத்துகிறோம். பருவ நிலை மாறி வருகிறது அல்லவா? ஊரில் வெயில் காலம் துவங்கி விட்டது.. இனி ஏப்ரல் , மே, கோடை காலங்கள்.. தற்போது அதிக பட்சமாக 37 டிகிரி செல்சியஸ். குறைந்த பட்சமாக 24 டிகிரி செல்சியஸ் சூரிய உதயம் அதிகாலை 6.16 அஸ்தம் 6.23.. சமீபத்தில் மனதில் இருந்து நீங்காத நினைவு அந்த மலேசிய விமானம்.. அது என்ன ஆனது? அதில் இருந்த பயணிகள்.. விமான சிப்பந்திகள், இரன்டு குழந்தைகள் உட்பட அனைத்து பயணிகளும்.. இறைவா.. எங்களால் தாங்க முடியாத சிரமத்தை தந்துவிடாதே..

மதுக்கூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 15வது வார்டு  சூரியத்தோட்டப்பகுதியில்புதிய அங்காடி (ரேசன் கடை)இன்று 05/03/2014 திறக்கப்பட்டது.காலை 10:00 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சிக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் தலைவர் சகோதரர் தண்டாயுதபாணி அவர்கள் தலைமை ஏற்க,அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளித்தலைவரும்,ஜாமியா மஸ்ஜித் கமிட்டி தலைவருமான சகோதரர் முகைதீன் மரைக்காயர்,மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச்செயலாளர் சகோதரர் ராவுத்தர்ஷா,பேரூராட்சி உறுப்பினர்கள் சகோதரர் ரியாஸ் அகமது,கபார் ஆகியோர் உரை நிகழ்த்த மதுக்கூர் பால்வளத்துறைத்தலைவரும்,அதிமுக ஒன்றிய செயலாளருமான சகோதரர் துரை.செந்தில் அவர்கள் புதிய நியாயவிலைக்கடையினை திறந்து வைத்து சிறப்புரை செய்தார்.