ஆத்மார்த்த நட்புகளே நலம் நலமறிய பேராவல் என்ன சேதி? எப்படி இருக்கீங்க? போகுது பொழுதுகள் இனிதே.. எல்லா புகழும் இறைவனுக்கே! சில தினங்களாக அலுவல் காரனமாக நமது இனையம் பக்கம் வரமுடியவில்லை. அமீரகத்தில் கடந்த இரன்டு நாட்களாக குளிர் குறைந்து இருக்கிறது. இருந்தாலும் இந்த வருடம் குளிர் அதிகம் என சொல்லலாம். ஊரில் நல்ல தட்பவெப்ப நிலை.. இப்போது மெல்ல வெயில் ஆரம்பித்து விட்டது.. குறைந்த பட்சம் வெப்ப நிலை 22 டிகிரி அதிக பட்சமாக 33 டிகிரி செல்சியஸ். இந்தியாவில் பீகார் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது நம்ம லாலு பிரசாத் யாதவ்.. இந்தியாவின் அந்த அளவுக்கு வளர்ச்சி அடையாத மா நிலம் என நாம் சில சமயங்களில் நினைப்பதும் உண்டு.. ஆனால் இப்போது ஒரு திட்டம் அங்கே வர இருக்கிறது. சுமார் 20 கி.மீட்டர் இனைய சேவை அதுவும் இலவசமாக.. Yes WiFi வாவ்வ்வ்வ்வ்வ்.. நம்ம ஊரிலே??? ஆடு, மாடு , தான் கொடுக்கிறாங்க... நம்ம ஊரின் முக்கிய விளையாட்டாக கிரிக்கெட் இருந்தாலும், அன்று முதல் நமது தேசிய விளையாட்டு கால்பந்து தான். கால்பந்தில் பல கேடயங்களும், பல பரிசுகளும் நமது ஊர் வெற்றி பெற்றது உண்டு. இன்னும் சொல்லப்போனால் நம்ம ஊர் அரசினர் மேல் நிலைப்பள்ளி கால்பந்தில் மா நில அளவில் winner முதல் பரிசும், ஒரு முறை runner இரன்டாம் பரிசும் பெற்றதுண்டு. wowwwwwwwwwww வாழ்த்துக்கள். பல முறை கால்பந்து தொடர்போட்டிகளும் நடத்தியும் இருக்கிறோம். இன்று காலை இனையத்தில் உலாவிய போது.. நமது இந்தியாவின் கால்பந்து கழகத்தின் இனைய தளம் தென்பட்டது. அதை இதோ உங்களுக்காக.. ஆமாங்க இப்போது சந்தோஷ் ட்ராபி போட்டிகள் நடைபெற்று வருகிறது. https://www.the-aiff.com/index.htm

மதுக்கூரில் சுமார் 30 லட்சம் செலவில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதர நிலையா மருத்துவமனையின் புதிய கட்டிடம் நேற்று (21-02-2014)திறந்துவைக்கப்பட்டது.

தமிழக முதல்வர் கானொலி முலமாக திறந்து வைத்தார்கள். இந்த மருத்துவமனி சுமார் 30 படுக்கை வசதி கொண்டது. மதுக்கூர் ஆரம்ப சுகாதர நிலையா மருத்துவமனையில் ஏற்கனவே மகப்பேறுக்கான படுக்கை வசதி உள்ளது. இப்புதிய கட்டிடம் மேலும் நமதூர் பகுதிக்கு அரசாங்க மருத்துவ வசதியை மேன்படுத்த உதவும்.