தேனீர் அருந்தும் வேளையில்.. ஆத்மார்த்த நட்புகளே.. நலம் நலமறிய பேராவல் என்ன சேதி? எப்படி இருக்கீங்க?! எல்லாம் வல்ல இறைவன் உதவியால் நமது நல்ல மழை பெய்து வருகிறது. இறைவனிடம் நாம் கேட்ட பிரார்த்தனைகள் வீண் ஆகவில்லை எனலாம். ஆமாங்க நேற்று காலை 8.30 மணி வரை பதிவான மழையின் அளவு 9 செ.மீ, சில வருடங்களுக்கு பின்னர் இந்த அளவு மழை பெய்துள்ளது. இன்னும் மழை பெய்துக்கொண்டே இருக்கிறது. அதிகமான மழை பொழிந்து நமது ஊரின் புதுக்குளம் நிறையவேண்டும். புதுக்குளத்தில் தண்ணீர் நிறைந்தால் அதை சுற்றியுள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தண்ணீர் பிரச்சனை இருக்காது. எல்லா புகழும் இறைவனுக்கே! தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக மதுக்கூரில் 93.6 மி.மீ. மழை பெய்தது. மாவட்டத்தில் இரு நாள்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்): மதுக்கூர் 93.6, திருவிடைமருதூர் 48.5, கும்பகோணம் 48, பட்டுக்கோட்டை 43, அணைக்கரை 37, அதிராம்பட்டினம் 32.6, மஞ்சலாறு 29.4, பூதலூர் 23.4, திருவையாறு 17.3, அய்யம்பேட்டை 14, பாபநாசம் 12, ஈச்சன்விடுதி 10.2, திருக்காட்டுப்பள்ளி 8.8, நெய்வாசல் தென்பாதி 8.6, தஞ்சாவூர், வெட்டிக்காடு தலா 8.4, வல்லம் 8, பேராவூரணி 7.2, குருங்குளம் 7, ஒரத்தநாடு 6.4, கல்லணை 5.4. இதேபோல, பகலிலும் மாவட்டத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் மாலை 4 மணி வரை பதிவான மழையளவு (மில்லிமீட்டரில்): மஞ்சலாறு 38.4, அணைக்கரை 34.2, திருவிடைமருதூர் 27.8, கும்பகோணம் 9.4, பாபநாசம் 6, அய்யம்பேட்டை, பேராவூரணி தலா 4, அதிராம்பட்டினம் 3, ஈச்சன்விடுதி 2.4, மதுக்கூர் 2.2, பட்டுக் கோட்டை 1.