Wish you a Happy Republic Day

மதுக்கூர் மின் பகிர்மானத்தில் உள்ள மின் இணைப்பு வைத்துள்ளவர்கள் தங்களுடைய மின் இணைப்பு எண் மற்றும் தங்களின் மொபைல் எண்ணையும் பதிவு செய்து கொள்ளவும்.

இவைகள் கேட்பதற்கு காரணம் தங்களுடைய மின் கட்டணம் கட்டக்கூடிய கடைசி தேதியினை குறுச்செய்தி(SMS) மூலமாக தெரிவிப்பதற்காக பெறப்படுகின்றது.மக்கள் சேவை முகாம் இந்த சிறப்பு முகாம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் மதுக்கூர் நகர கிளையின் சார்பாக நாளை 11/01/2014 மதுக்கூர் பள்ளிவாசல் தெரு மதீனா சூப்பர் மார்க்கெட் அருகிலும்,சூரியத்தோட்டம் பள்ளிவாசல் அருகிலும் நடைபெறுகின்றது.மற்ற பகுதிகளில் தொடர்ந்து நடைபெறும்.மின்கட்டண இணைப்பு எண் மற்றும் மொபைல் எண் ஆகியவை கொண்டு வரவேண்டும்

அன்றைய காலங்களில் திரைப்படங்கள் என்றால் சாதரனமாக சொல்லமுடியாது.. கருத்து மிக்க வசனங்கள், ஆழமான சிந்தனைகள் மூட நம்பிக்கை ஒழிக்கும் பிரச்சாரம் தூங்கி கிடக்கும் தமிழனை தட்டி எழுப்பும் சிந்தனைகள் என சில திரைப்படங்கள் வந்தது என்றால் மிகையல்ல. அந்த வரிசையில் பட்டியல் இட்டால் முதல் இடம் பிடிப்பது ரத்தக்கண்ணீர். இந்த படம் நடிப்புக்காக மட்டும் புகழ் பெற்றது என்று சொல்லமுடியாது. அதன் வசனங்களுக்காகவும் புகழ் பெற்றது. இந்த படத்திற்கு வசனம் எழுதியவர் தான் திருவாரூர் தங்கராசு. அடியே காந்தா... இப்போதும் தமிழகத்தில் பலரும் மறக்காத வசனங்கள். இதோ தங்கராசுவைப்பற்றி படித்த சில தகவல்கள் ரத்தக்கண்ணீர், பெற்ற மனம், தங்கதுரை என 3 பெரும் வெற்றிபெற்ற திரைப் படங்களுக்கு கதை, வசனம் எழுதிய தங்கராசுவுக்கு, சினிமா வாய்ப்புகள் வந்தபோதும், ‘நான் சினிமாக்காரன் அல்ல, பெரியார் இயக்கப் பிரச்சாரகர்’ என்று கூறி திரைப்படத் துறைக்கு செல்லவில்லை.