மதுக்கூர் கிரிக்கெட் கிளப்

நமதூரில் பல விளையாட்டுக்கள் காலம் காலமாக விளையாடி வருகிறார்கள்.
அதில் ஒன்று soft ball. சதுரமாக இதன் களம் இருக்கும். நான்கு மூலைகளிலும் ஓடி ஓட்டம் எடுக்க வேண்டும்.
அப்போது இது தான் நமதூரில் எல்லா இடங்களிலும் விளையாடி வருவார்கள்.
நமது அரசினர் மேல் நிலைப்பள்ளியிலும் இதான் விளையாடுவார்கள்.
அந்த காலகட்டத்தில் நமதூரில் விளையாட துவங்கியது தான் கிரிக்கெட்.
இதன் துவக்கம் என உத்தேசமாக சொன்னால் கிட்டத்தட்ட 25 வருடங்கள் கடந்து விட்டது எனலாம்.
பலரும் ஆர்வமுடன் விளையாடினர்.. பலரும் புரவலர்களாக இருந்தனர்.
பலமுறை போட்டிகளும் நமதூரில் நடந்து இருக்கிறது.

பல ஊர்களில் போட்டிகளுக்கு சென்று
பரிசும் பெற்று வெற்றிப் பெற்றுள்ளனர்.


அந்த கிரிக்கெட் இன்றும் நமதூர் சகோதரர்கள் விளையாடி வருகின்றனர்.
ஊரிலும் விளையாடுகின்றனர். அமீரகத்திலும் விளையாடி வருகின்றனர்.

அமீரகத்தில் விடுமுறை நாட்களில் நண்பர்கள்
விளையாடி வருகின்றனர். காலைப்பொழுதில் விளையாடும் இவர்கள்,
சில நண்பர்கள் புரவலர்களாக விளையாட்டு முடிந்து
சிற்றுண்டியுடன் அன்றைய மைதானத்தில் இருந்து வெளியேறுகின்றனர்.