தொடரும் புயல்கள்

சில வாரங்களாக புயல் கரையை கடக்கும் என்ற செய்திகள்
தொடரும் செய்திகளில் இப்போது வந்துள்ள புயல்
இன்று கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கடந்த வாரம் கரையை கடந்த புயல் அந்த அளவுக்கு பாதிக்கவில்லை என்றாலும்,
இன்றைய புயலின் வேகம் மணிக்கு 170 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஆந்திரத்தின் கடலோர மாவட்டங்களில் புதன்கிழமை மாலையே 45-55 கி.மீ. வேகத்தில் காற்று வீசத் தொடங்கியது. காற்றின் வேகம் மெதுவாக அதிகரித்து வருகிறது. புயல் கரையைக் கடக்கும்போது குண்டூர், கிருஷ்ணா, விசாகப்பட்டினம், கோதாவரி ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 170 கி.மீ. வேகத்திலும், விஜயநகரம், பிரகாசம் ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 120 கி.மீ. வேகத்திலும் சூறைக்காற்று வீசக் கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

இந்தப் புயலால் ஆந்திரம் முழுவதும் பரவலாக மழை பொழியும். சில கடலோர மாவட்டங்கள் பலத்த மழையால் வெள்ளத்தில் மிதக்கும் வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில், ஆந்திர மாநில அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆனால் இந்தப் புயலினால் நம்ம தமிழகத்திற்கு
ஒன்றும் பாதிப்பில்லை.. இருந்தாலும் மழையின் அளவு
இந்த வருடம் குறைவாக காணப்படுகிறது.
கார்த்திகை மாதம் இன்னும் மழை கூடுதலாக பெய்ய வேண்டும்.
அப்போது தான் அடுத்து வரும் கோடையை
குடிதண்ணீர் பிரச்சனையில் இருந்து சமாளிக்கலாம்.
பிராத்தனைகள் செய்வோம்.

___

சென்னை : செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்ட பாதையில் சுற்றி வர, 'இஸ்ரோ'வால், 450 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட, 'மங்கள்யான்' செயற்கைகோளை சுமந்தபடி, பி.எஸ்.எல்.வி., - எக்ஸ்.எல்., சி - 25 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, நேற்று மதியம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 10 மாதங்கள் பயணம் செய்யும், 'மங்கள்யான்' செயற்கைகோள், அடுத்த ஆண்டு, செப்டம்பர், 24ம் தேதி, செவ்வாய் கிரகத்தின், சுற்று வட்ட பாதையை அடைந்து, தன் ஆராய்ச்சியை துவக்கும்.

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர், கனிம வளம், வாயுக்கள் மற்றும் மனிதர் வாழ ஏற்ற சூழ்நிலை உள்ளதா என்பது குறித்து ஆராய, 'இஸ்ரோ'வால், 'மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன்' திட்டம் வகுக்கப்பட்டது. இதற்கு, 'மங்கள்யான்' திட்டம் எனவும் பெயரிடப்பட்டது. 'மங்கள்யான்' செயற்கைகோள், 450 கோடி ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்டது; இதன் எடை, 1,350 கிலோ.'மங்கள்யான்' செயற்கைகோள் திட்டமிட்டபடி, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து, நேற்று மதியம், 2:38 மணிக்கு, பி.எஸ்.எல்.வி.- எக்ஸ். எல்., சி-25 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
'மங்கள்யான்' செயற்கைக்கோள், விண்ணில் செலுத்தப்பட்ட, 43:40 நிமிடங்களில், (இந்திய நேரம் - 3:22) புவி வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. தற்போது, 'மங்கள்யான்' செயற்கைக்கோள், பூமியின் புவி வட்ட பாதையில், பூமிக்கு அருகாமையில், 250 கிலோ மீட்டர் தூரத்திலும், தொலைவில், 23,500 கிலோ மீட்டரிலும், நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது.

மதுக்கூர் இடையகாடு (பெரியார் நகர்) பகுதியில் வசித்துவரும் சகோதரர் சாகுல்ஹமீது அவர்கள் மதுக்கூர் சந்தைப்பள்ளிக்கூடம் எதிரில் PTM என்ற ஹோட்டல் நடத்தி வருகின்றார்.(உணவகம்)இவரின் இளைய மகன் தாரிக் வயது 23.இவர் டிப்ளமோ படித்து உள்ளார்.சகோதரர் தாரிக் தனது தந்தையின் ஹோட்டலில் அத்தாவுக்கு உறுதுணையாக அனைத்து வேலைகளையும் ஆர்வமுடன் செய்வார்.

இந்தியன் தவ்ஹீத் ஜமாத்தின் மாநில நிர்வாகி மைதீன் என்பவருக்கும் ,தாரிக்கிற்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகின்றது.இந்நிலையில் தீபாவளி அன்று ஹோட்டல் விடுமுறை என்பதால் தாரிக் தனது நண்பர்களுடன் இடையகாடு வேலாடிப்பள்ளம் என்னும் குளக்கரையில் பேசிக்கொண்டு இருந்திருக்கின்றார்.அங்கே தனது நண்பர்கள் நியாஸ் அகமது,தாவூதுஷா ஆகியோருடன் வந்த மைதீனுக்கும்,தாரிக்குக்கும் கைகலப்பு ஏற்பட்டு உள்ளது.மைதீன் வைத்திருந்த கத்தியால் தாரிக்கை குத்தியதாக தெரிகின்றது.நிலைகுலைந்த தாரிக் கீழே விழ அருகில் நின்றுகொண்டிருந்த தாரிக்கின் நண்பர்கள் இருசக்கரவாகனத்தில் தாரிக்கை ஏற்றிவைத்துக்கொண்டு காவல்நிலையம் சென்றுள்ளார்கள்.(தீபாவளி என்பதால் எந்த மருத்துவரும் மதுக்கூரில் இல்லை) காவல் நிலையம் மூலமாக தமுமுக ஆம்புலன்ஸுக்கு தகவல் வர உடனடியாக காவல்நிலையம் சென்ற தமுமுகஆம்புலன்ஸ் படுகாயமடைந்து இருந்த தாரிக்கை அழைத்துக்கொண்டு பட்டுக்கோட்டை நோக்கி விரைந்தது.(இதற்கிடையில் மைதீனின் நண்பர் நியாஸ் என்பவர் தான் தான் தாரிக்கை குத்தினேன் எனக்கூறி மைதீனுடன்சென்று மதுக்கூர் காவல்நிலையத்தில்   சரண்டர் ஆகியிருக்கின்றான். படுகாயத்துடன் இருந்த தாரிக்கை ஆம்புலன்ஸில் மைதீனும் ஏற்றிவிட்டு இருக்கின்றார்)

Madukkur.com wish you and family a happy prosperous Deepavali