மதுக்கூர் தி புரபோஷனல் கொரியரி-மதுக்கூர் இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு பெருமளவில் ஏடிஎம் கார்டுகள் வந்துள்ளது. இதை டோர்-டூ-டோர் டெலிவரி செய்வது கொரியர் நிறுவனத்தின் வேலை. ஆனால் அவர்கள் நம்மை அங்கு வரச்சொல்லி கார்டை கொடுக்கின்றனர். மேலும் ஒரு கார்டுக்கு ₹10 கமிஷனும் கேட்கின்றனர்.

குறிப்பு: நிறைய பெண்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்களுடைய ஏடிஎம் கார்டுகள் தேங்கி கிடக்கிறது.

3 இலட்சத்துல வீடு:
 
இரவு குளிரில் நடுங்கும் நாய் நினைக்குமாம் கண்டிப்பாக விடிந்தவுடன்  ஒரு போர்வை வாங்கிகொள்ள வேண்டும் என்று, மறுநாள் காலையில் வெயிலிலை பார்தததும் போர்வை வாங்க வேண்டும் என்பதையே மறந்துவிடுமாம் அன்று இரவு மீண்டும் நினைக்குமாம் நாளைக்கு கண்டிப்பாக போர்வை வாங்க வேண்டும் என்று இப்படியே ஒவ்வொரு இரவும் நினைக்குமாம் அந்த நாய், கிராமங்களில் இப்படியோரு கதை சொல்வார்கள் அதை போன்றதுதான் வெளிநாட்டு வாசிகளின் வாழ்க்கை!

Read More

தஞ்சையின் மாநகரின் மத்தியில் மனை விற்பனைக்கு உள்ளது. இது தஞ்சையின் ரயில்வே ஜங்கசன் , பழைய பஸ் ஸ்டாண்ட், ஒரியண் டவருக்கு மிக அருகாமையில் உள்ளது.  தஞ்சை பன்னாட்டு விமான நிலயம் உள்ள திருச்சிக்கும், நமது ஊர்களுக்கும் இடையில் இருக்கின்றது. தஞ்சையில் பல கல்வி நிலயங்களும், மருத்துவ வசதியும், மாவட்ட தலைநகரகவும் உள்ளது. தஞ்சை நமது மக்களின் பல ஊர்களை இணைக்கும் மத்திய நகரமாக விளங்கின்றது. புதிய தொழில் தொடங்க பல வாய்ப்புகள் கொண்டுள்ளது. நமக்கும் நமது சந்ததினர்க்கும் பயன்தரும் வகையில் முலதனம் செய்ய பொண்ணான வாய்பாகும்.

 Please click here for full Layout

  • தஞ்சை நமது ஊர்களுக்கு மிக அருகமையில் உள்ளதால் நமது ஊர் உறவுகள் தொடரும்
  • தஞ்சை பன்னாட்டு விமான நிலையம் மற்றும் தொழில், வியாபார நகரமான திருச்சிக்கு அருகமையில் உள்ளது
  • தஞ்சை மாவட்ட தலைநகரமாகவும், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் அடங்கிய வியாபாரதளமாக உள்ளது
  • விட்டுமனை நகரில் இருந்து வெகுதொலைவிலோ, நெடுஞ்சாலையிலோ இல்லாமல் நகரின் மத்திய பகுதியில் உள்ளது
  • விட்டுமனை குடியிருப்பு தெருவில் உள்ளது
  • தஞ்சை மாநகராட்சி எல்லைக்குள் உள்ளது. பாதாள சாக்கடை வசதி உள்ளதால் பல அடுக்குமாடி கட்ட வாய்ப்புள்ளது.

மேலும் விவரங்களுக்கும், மனையை காண்பதற்கும் தொடர்புகொள்ளவும்.

+919443160346  +919865925939       +91 9840140342   +919659770290

 {gallery}sampledata/parks/landscape{/gallery}

 

மதுக்கூரில் புதிய் பள்ளிவாசல் கட்டுவதற்கு ஜாமத்தினர்கள் முடிவு செய்து அதற்கான ஆரம்பபணிகள் தொடங்கப்பட்ட செய்தியை முன்னர் மதுக்கூர்.காமில் பதிவு செய்து இருந்தோம். அதனை தொடர்ந்து மதுக்கூர் ஜாமியா பரிபாலனக்கமிட்டி தலைவர் ஜனாப் முகைதீன் மரைக்கயார் அவர்களிடன் நடைபெற்ற நேர்காணலின் விவரங்களை தங்களுக்கு பதிவு செய்கின்றோம்.

மதுக்கூரில் புதிய பள்ளிவாசல் கட்டுவதற்கு முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெறுகின்றது என்பதை அறிய வந்தோம். அதன் விவரம் பற்றி கூறுங்கள்.

தங்கள் குறிப்பிட்டபடி எல்லாம் வல்ல அல்லாவின் கருணையால் மதுக்கூரில் புதிய பள்ளிவாசல் தற்பொழுது அமைந்து உள்ள இடத்தில் கட்டுவதற்கு ஜாமாத்தினர்கள் முடிவு செய்யப்பட்டது. பலரின் யோசனை மற்றும் கருத்தின்படி இப்பொழுது உள்ள பேஷ் இமாம் தொழுகை நடத்துகின்ற பகுதியை அப்படியே விட்டுவிட்டு அதன் கிழ்புறம் மற்றும் முன்புறம் அடங்கியபடி முன்னே வடிவு அமைக்கப்பட்டபடி புதிய பள்ளிவாசல் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் விவரங்களை தெரிவிக்கவும் தாமாக முன்வந்து அளிக்கும் நன்கொடை பெறவும் நமதூர் மக்களை அணுகிவருகின்றோம்.

மேலும் நமதூர் மக்களின் குறிப்பிட்ட வள்ளாலர்களையும் அணுகி நன்கொடை கேட்டு வருகின்றோம். பெரும் தொகையை நன்கொடை அளிக்க விருப்பமுள்ளவர்களுக்கு தவணை முறையில் பெற்றுக்கொள்ளவும் ஜமாத்தினர்கள் முடிவு செய்துள்ளார்கள்.

இப்பள்ளிவாசல் நல்லமுறையில் விரைவில் கட்டி முடிப்பட்டு இன்ஷால்லாஹ் நமக்கும் நமது சந்ததினர்களுக்கும் இறைவிடமாக அமைய தங்களின் பேராதரவையும், ஒத்தழைப்பையும் கோருகின்றோம். வஸ்ஸலாம்.

ஐ.நா.,வின் சமீபத்திய கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 10 முதல் 24 வயது உள்ளோரின் எண்ணிக்கை 35 கோடிக்கும் மேல். அதாவது மொத்த மக்கள் தொகையில் 28 சதவிகிதம். ஐ.நா., மட்டுமல்லாது அவ்வப்போது இந்தியாவிற்கு வரும் மேலைநாட்டு தலைவர்களும் நமது இளைஞர் சக்தியை மெச்சிக்கொள்ள தவறியதில்லை. தங்களது உற்பத்திப் பொருட்களுக்கான நுகர்வோர் சந்தையாக நம்மை பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் அவர்களை விடுங்கள். நம் நாட்டின் இளைஞர் சக்தியை நாம் எப்படி பயன்படுத்த போகிறோம் என்பது தான் இப்போதைய கேள்வி.

Read More

மதுக்கூரில் புதிய பள்ளிவாசல் கட்டுவதற்காக ஆயுத்த பணிகள் தொடங்கி உள்ளது. மதுக்கூர் ஜாமிய பரிபாலான கமிட்டி மற்றும் இரு சங்க உறுப்பினர்கள் எடுத்தமுடிவுபடி வடிவு அமைக்கப்பெற்று அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. பொதுமக்கள் திரளாக வந்து இருந்து அடிக்கல் நாட்டு விழாவினை சிறப்பித்தார்கள். இப்பணி விரைவில் முழுமை அடைந்து அதன் நோக்கம் நிறைவேற வாழ்த்துகின்றோம்.

வியாழன், வெள்ளி, சனி என்று பல நாட்கள் முயன்று சென்ற திஙகள் டிக்கேட் கிடைக்கப்பெற்று அல்கொரையர் திரையரங்கில் PK என்ற இந்தி படத்தை காண வாய்ப்பு கிடைத்தது. முனாபய் M.B.B.S., திரி இடியட் போன்ற வித்தியசமான படங்களை தந்த இந்தி டைரக்டர் ராஜ்குமார்  கிரானியின் படம் என்பதால் பல எதிபார்ப்பு எனக்குள் இருந்தது. அது வீண் போகவில்லை. வெளி கிரகத்தில் இருந்து பூமி வரும் அமிர்கான் தான் திரும்பி செல்ல உதவும் ரிமொட் கண்ட்ரோலை திருடனிடம் இழந்ததையும் அதை திரும்ப பெறுவதம் தான் கதை சுருக்கம். வெளிகிரகத்தில் இருந்து வரும் ஒருவன் பார்வையில் நமது பூமியில் கடவுள் நம்பிக்கை எப்படி உள்ளது என்பதை இது சித்திரிக்கின்றது நகைசுவையுடன்.கதை கற்பனைதான் ஆனால் கருத்துகள் நிஜம்.  மதத்தின் பேரில் தாயத்து விற்பவர்களுக்கு இது சரியான சாட்டைஅடி.

சென்றவாரம் சங்கர் டைரஷ்னில் லிங்கா படத்தையும் பார்த்தேன். நாம் எங்கோயோ தப்பு செய்கின்றோம்.

வருடம் 2014 நம்மைவிட்டு செல்கின்றது. ஆனால் விமானவிபத்துகள், குண்டுவெடிப்புகள்,  வாகனவிபத்துகள்,  நோய், தற்கொல்லை என பல வடுகளை நமது இதயத்தில் விட்டு செல்கின்றது. இறைவா எங்களுக்கு நல்வழி காட்டு என்ற வேண்டுதலுடன் புதிய வருடத்தை வரவேற்போம்.

மதுக்கூரில் சந்தை பள்ளிகூடம் என்பது நம்மவரில் பலரின் கல்வி வாழ்க்கையில் பெரும் பங்கு வகிக்கின்றது. மதுக்கூர் சந்தைப்பேட்டை சுற்றி வாழ்ந்த இன்று இருக்கின்ற ந்டுத்தர வயதினர்களில் பெரும்பாலார் இங்கு கல்வி கற்றுள்ளனர். காமாட்சி டிச்சர் போன்றவர்கள் தாய்க்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் ஆசிரியர்களாக இருந்திற்கின்றார்கள்.

இடிப்பட்டு இருந்த இப்பள்ளி கட்டிடத்திற்கு  மாற்றாக புதிய கட்டிடத்தை மதுக்கூர் பேருராட்சி நிதி மற்றும் தனி நபர்களின் பொருளாதர உதவி முலம் கட்டப்பட்டு பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 

 

மனம் உருகி, கண்ணீர் மல்கிய மாணவர்கள்:கல் மனதையும் கரைத்த கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தி
 

மனநல பயிற்சியாளர், தன்னம்பிக்கை குறித்து பேச வரும் போது, சில மாணவர்கள், ஆரவாரமுடன் கைதட்டி, பேச்சை கவனித்த மாணவர்களுக்கு இடையூறாக இருந்தனர். ஆனால், அவர், தியான வழியில் தன் பேச்சை தொடர்ந்ததால், அரங்கமே அமைதியானது.

அவர் பேசியதாவது:இன்றைய சமூகத்தில், ஒவ்வொருவர் மனதையும், நான்கு விதமான பூச்சிகள் அரித்துக் கொண்டிருக்கின்றன. அதனால், சமூகம் சீரழிந்து கிடக்கிறது. அந்த பூச்சிகள், உங்கள் மனதையும் அரித்தபடி தான் இருக்கின்றன.சுயநலம், நன்றி கெட்டத்தனம், உணர்ச்சியற்ற தன்மை, எடை போடுதல் ஆகியவையே அவை.

Read More

மதுக்கூரில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மதுக்கூரில் வியாழக்கிழமை நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுக்கூர் ஒன்றிய 11-வது மாநாட்டில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள்: பால் விலை உயர்வு, உத்தேச மின்கட்டண உயர்வு ஆகியவற்றை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 5 பேரை விடுதலை செய்ய துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கடைமடைப் பகுதியான மதுக்கூர் பகுதிகளில் காவிரி கிளை வாய்க்கால்களில் பாசனத்துக்கு முறைவைக்காமல் தண்ணீர் விடவேண்டும். கூட்டுறவு சங்கங்களில் மானியத்தில் விவசாயிகளுக்கு யூரியா உள்ளிட்ட உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கச் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டுக்கு வை. சிதம்பரம், எஸ். ரெத்தினம், ஆர். நாகநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஒன்றியக்குழு உறுப்பினர் கே. லெட்சுமணன் மாநாட்டுக் கொடியேற்றினார். கே. கோவிந்தராஜ் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. ரமேஷ் மாநாட்டைத் தொடக்கி வைத்தார். ஒன்றியச் செயலாளர் ஆர். காசிநாதன் வேலை அறிக்கை சமர்ப்பித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சி. பழனிவேலு நிறைவுரையாற்றினார். மாநாட்டில் மதுக்கூர் ஒன்றியக்குழு உறுப்பினர்களாக 9 பேர் கொண்ட குழு தேர்வு செய்யப்பட்டது. ஒன்றியச் செயலராக ஆர். காசிநாதன் தேர்வு செய்யப்பட்டார். ஏ.எம். வேதாசலம் வரவேற்றார். எம். அய்யநாதன் நன்றி கூறினார்.